’ஜவான்’பட வில்லனின் தோற்றத்தை ஷாருக்கான் வெளியிட்டார்!

145

ஷாருக்கானின் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ஜவான்’ மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படத்தின் வலிமைமிக்க எதிரியின் தோற்றத்தை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெளியிட்ட ஒரு புதிய போஸ்டரில் விஜய் சேதுபதியை, ‘மரணத்தின் வியாபாரி’ என அறிமுகப்படுத்துகிறார். இரண்டு வலிமைமிக்க நட்சத்திர கலைஞர்களுக்கு இடையே மறக்க முடியாத மோதல் இருக்கிறது என உறுதி அளிக்கிறார். ‘ஜவான்’ பெரிய திரையில் இந்த இரண்டு நட்சத்திரங்களின் முதல் சந்திப்பை குறிக்கிறது.

அண்மையில் வெளியான அதிரடி மிக்க பிரிவியூவில் ஏற்கனவே உயர்தரமான டைனமிக் விஜய் சேதுபதியின் காந்த பார்வை ரசிகர்களை கவர்ந்தது. இப்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டர் பயமுறுத்தலுடன் கூடிய கட்டளையிடும் வில்லனாக அவரது கதாபாத்திர சித்தரிப்பை காட்டுகிறது. ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி இடையேயான காவிய முகத்தை எதிர்பார்த்து… பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் நிறுத்துகிறது.

‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சக்தி வாய்ந்த நடிப்பு மற்றும் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றவர் என்பதால், அவரின் திரை தோன்றல் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. ‘மரணத்தின் வியாபாரி’யாக அவர் மாறி இருப்பது முதுகுத்தண்டையும் சில்லிட வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது. ஆக்சன் மற்றும் திரில்லர் ஆர்வலர்களுக்கு ‘ஜவான்’ அவசியம் பார்க்க வேண்டிய படைப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு போஸ்டர் வெளியிட்டிலும் ‘ஜவான்’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பும், உற்சாகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஷாருக்கானின் வழுக்கை தோற்றம் முதல் நயன்தாராவின் தீவிரமான தோற்றம் வரை… ஒவ்வொரு போஸ்டரும் இந்த அதிரடி களியாட்டத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் மிரட்டலான கதாபாத்திரத்தின் வெளிக்கொணர்வு… படத்தின் மீதான கவர்ச்சியை அதிகப்படுத்தி.. எதிர்பார்ப்பின் மற்றொரு அடுக்கை சேர்த்துள்ளது.

‘ஜவான்’ படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் ஷர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.