ஹாக்கி திருவள்ளூர் ஏற்பாடு செய்த நுவோ கிளினிக் திருவள்ளூர் பிரீமியர் லீக் (TPL) 3.0 ஹாக்கி தொடர் வரலாற்றுச் சிறப்புமிக்க எக்மோர் எஸ்டிஏடி மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைப்பெற்றது.
இந்த மாபெரும் இறுதிப்போட்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பேங்கர்ஸ் ட்ரோபி ஆகும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி vs இந்தியன் வங்கி மோதின, இதில் இந்திய வங்கி 4 க்கு 3 என்ற கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் அணியை வென்றது.
2025 ஆகஸ்ட் 11 முதல் 31 வரை நடைபெற்ற இந்த லீக்கில் 10 அணிகள் பங்கேற்று, பரபரப்பான போட்டிகள், சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் முதன்முறையாக வீடியோ ரெஃபரல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு, ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான ஹாக்கி விருந்தாக அமைந்தது.
இந்த நிகழ்விற்கு மாண்புமிகு திரு. எஸ். எம். நாசர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
அவருடன் மாண்புமிகு திரு. ஐ. பரந்தாமன் (சட்டமன்ற உறுப்பினர் – எழும்பூர்), பத்மஸ்ரீ. ஒலிம்பிக் ஹாக்கி தங்கப்பதக்கம் வென்ற திரு. வி. பாஸ்கரன், ஹாக்கி திருவள்ளூர் தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை, ஒலிம்பியன்ங்கள் திரு. முகமது ரியாஸ் & திரு.திருமாவளவன், இந்திய இன்டர்நேஷனல் திரு. பிரபாகரன், FIH அதிகாரி திரு. முகமது முனீர், மற்றும் இந்திய பயிற்சியாளர் திரு. சி. ஆர். குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.