அப்துல் தாஸ் இதற்கு முன் நடித்த படங்களில் வில்லனாகவும், ரகர்… கேரக்டர் ஆகவும். சிட்டி பாய். என்று பலர் கேரக்டர்களின் நடித்திருந்தாலும் இந்த பாம் திரைப்படத்தில் வெகுளித்தனமாகவும் அப்பாவியாகவும் தன் நண்பனுக்காக உயிரை விடும் அளவுக்கு துணிந்தவன் ஆகவும் வாழ்ந்திருப்பது பார்வையாளர்களுக்கு புதிதாக உள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு வில்லனாக இரட்டை வேடத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் அர்ஜுன் தாஸ். இந்த பாம் திரைப்படம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பு துளியும் குறையாமல் வேறொரு அர்ஜுந்தாசை இந்த படத்தில் பார்க்க முடியுது. இந்த பாம் திரைப்படம் அர்ஜுன் தாஸுக்கு ஒரு கமர்சியல் ஹீரோவாகவும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்தி உள்ளது.