Take a fresh look at your lifestyle.

டி என் ஏ (DNA) சினிமா விமர்சனம்

பிறந்த குழந்தையை தொலைத்து விட்டு பரிதவிக்கும் பெற்றோரின் துயரம்

119

படித்தவர்கள் உள்ள குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்து தன் காதல் தோல்வியால் குடிக்கு அடிமையாகி கஷ்டப்படும் மகனாக அதர்வா இந்த படத்தில் நல்லதொரு நடிப்பை காட்டி இருக்கிறார். இந்த சூழலில் தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் அவன் திருந்திடுவான் என நினைத்த தந்தை ஒரு பெண்ணை பார்க்கிறார் . அந்தப் பெண்ணிற்கு பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்ற மனநிலை பிரச்சனை உள்ளது. அந்தப் பெண்ணை பெண் பார்க்க எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்தும் அவளைப் பைத்தியம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். அந்தப் பெண்ணை அதர்வா திருமணம் செய்து கொள்கிறான் . அந்தப் பெண்ணாக நிமிஷா கதாபாத்திரத்தில் ஒன்றித்து சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது அரசாங்க மருத்துவமனையில் பிறக்கும் அந்த குழந்தை கடத்தப்பட்டு அதற்கு பதில் வேறொரு குழந்தையை வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். இப்பொழுது இது தன் குழந்தை இல்லை என நிபிஷாவுக்கு மட்டும்தான் தெரிந்து. இது நம் குழந்தை அல்ல என்று ஆனந்திடம் புலம்புகிறாள். முதலில் ஆனந்த் இதை நம்ப முடியாமல் இது நம்ம குழந்தை தான் என்று தன் மனைவியிடம் சொல்கிறான், பிடிவாதமாக இருக்கும் தன் மனைவி திவ்யா சொல்வதை ஆனந்த் ஏர்க்கிறான் ,தன் குழந்தையை கண்டுபிடிக்க பல வழிகளில் தேடுகிறான் இதை ஒரு கும்பல் அந்த குழந்தையை கடத்துகிறார்கள் இது ஒரு  குழந்தை கடத்தல் கும்பல் ஆண் குழந்தையாக இருந்தால் நரவலிக்கு பயன்படுத்துவார்கள் பெண் குழந்தையாக இருந்தால் வடநாட்டுக்கு கடத்துவார்கள் இந்த கும்பலில் இருந்து  தன் குழந்தையை எப்படி கண்டுபிடித்தான் எவ்வாறு போராட்டம் நடத்தினான் என்பதுதான் இந்த படத்தின் விறுவிறுப்பான திரைகதை . திவ்யாவாக நடித்திருக்கும் நிமிஷ நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறாள் குழந்தைக்காக ஏங்கும் ஒரு தாயின் பரிதவிப்பு தன் குழந்தையை என்ன செய்து விட்டார்களோ என்ற ஏக்கம் படம் பார்க்கும் ரசிகர்களை கலங்க வைக்கும்.

ஒரு புதிய கோணத்தில் கதை வடிவமைப்பு விறுவிறுப்பான திரைக்கதை அருமையான ஒளிப்பதிவு மிகச் சிறந்த பின்னணி இசை மொத்தத்தில் பரபரப்பான crime thriller திரைப்படமாக வெளிவந்திருக்கும் DNA இந்தப் படத்தை கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டும் 100% மக்கள் பார்க்க வேண்டிய படம்

3/5