இந்தியன் 2 திரை விமர்சனம்

இந்தியன் 2 திரை விமர்சனம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம், ‘இந்தியன்’. இதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா  ஆகியோர் நடித்திருந்தனர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருந்தார்.
இப்போது இந்தியன் 2  இப்படத்தில் கமல்,  ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், S J சூர்யா,  ப்ரியா பவானி சங்கர், ஜெகன் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து அனிருத் இசையில் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட்ஜெயன்ட் வெளியிட்டுள்ளது.
.
இந்தியன் முதல் பாகத்தின் கதை சுருக்கம்
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் சேனாபதி (கமல்). நேதாஜியின் படையில் முக்கிய நபராக திகழ்ந்து வந்த சேனாபதி, போரில் வெள்ளையர்களிடம் பிடிபடுகிறார்.
இவர்களுக்கு சந்திரபோஸ் ‘சந்துரு’ மற்றும் கஸ்தூரி சேனாபதி என இரு பிள்ளைகள். இதில் மூத்த மகன் சந்துரு குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலையில் சேர நினைக்க, அவரை கண்டிக்கிறார் தந்தை சேனாபதி. இதனால் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்று விடுகிறார் சந்துரு.
இதன்பின் வீட்டில் திடீரென நடக்கும் விபத்தில் நெருப்பில் சிக்கிக்கொள்ளும் கஸ்தூரி உடல் கருகிய நிலையில் உயிர் போராடிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் லஞ்சம் தந்ததால்தான் மருத்துவம் பார்ப்பேன் என மருத்துவர் கூற, ‘நான் ஏன் லஞ்சம் தரவேண்டும், அதை கொடுக்க மாட்டேன்’ என கூறுகிறார் சேனாபதி.
இதனால் அவருடன் மகள் இறந்து போகிறார். நேர்மையாக இருந்ததற்காக கிடைத்த பரிசா என்னுடைய மகளின் இறப்பு, இதன்பின் லஞ்சம் ஊழல் என்கிற வார்த்தை தமிழ்நாட்டில் கேட்க கூடாது, இதனால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என முடிவு செய்யும் சேனாபதி மீண்டும் நேதாஜி வழியில் செல்ல முடிவு செய்கிறார்.
தன்னிடம் லஞ்சம் கேட்ட ஒவ்வொரு அதிகாரிகளையும் கலையெடுக்கிறார் சேனாபதி. தொடர்ந்து பல அரசு அதிகாரிகளின் மரண செய்தியால் இந்தியன் தாத்தாவின் மீது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பயம் ஏற்படுகிறது.
இப்படியொரு சூழ்நிலையில், தன் மகன் சந்துரு லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்த தவறால் பல உயிர்கள்  போய்விடுகிறது. இதனால் தனது மகனையே கொள்ள முடிவு செய்கிறார் சேனாபதி. இறுதியில் லஞ்சம் வாங்கி தவறு செய்த தனது மகனை கொலை செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். ஆனால், மீண்டும் தவறு நடந்தால் இந்தியன் வருவான் என இறுதியில் எச்சரித்து முதல் பாகம் முடிந்திருக்கும்
இந்தியன் 2 : Zero Tolerance படத்தின் கதை
நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக வீடியோக்கள் எடுத்து, தங்களது ‘பார்கிங் டாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதிகப்படியான லஞ்சம் மற்றும் ஊழல்களால் நாடே மோசமாகி வருவதைக் கண்டு தங்களால் ஓன்றுமே செய்யமுடியாமல்  வெகுண்டெழும் நண்பர்கள் குழு, இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகின்றனர்.
இந்தியன் தாத்தாவை தேடும் பயணத்தில் இறங்குகின்றனர்
சமூக வலைதளங்களில் COME BACK INDIAN என்ற ஹேஷ்டேக்கில்
இங்கு நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை இந்தியன் சேனாபதிக்கு தெரிவிக்கின்றனர்
 தைவானில் வர்மக்கலை பயிற்சிப் பள்ளி நடத்தி வரும் சேனாபதிக்கு இத்தகவல் செல்கிறது. மக்களின் குரலுக்குச் செவி சாய்த்து, இந்தியாவிற்கு மீண்டும் வர சேனாபதி முடிவு செய்கிறார்.
 28 ஆண்டுகள் கழித்து  சேனாபதி இந்தியா வரும் செய்தியறிந்து பாபி சிம்ஹா  விமான நிலையத்திலேயே கைது செய்ய வேண்டும் என திட்டம் தீட்டுகின்றனர்.  லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்க கூடாது என இந்திய வரும் சேனாதிபதி போலிஸ் திட்டத்தை முறியடித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து தவறு செய்தவர்களை  தன் வர்மக்கலை மூலம் கொன்றாரா? இல்லையா? ஆதற்காக சேனாபதி என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? என்பதே படத்தின் மீதிக் கதை.
நடிப்பிலும் ஆக்ஷன் காட்சிகளில்
கமல்ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். சித்தார்த் கொடுத்த கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளார்.
ஜெகன், பிரியா பவானி சங்கர், ரிஷி காந்த் ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சித்தார்த்தின் காதலியாக வரும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பும் அருமை.  சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, விவேக் ஆகியோர் நினைவில் நிற்கிறார்கள்.   வில்லன்களாக குல்ஷானும் ஜாகிர் ஹுசைனும் நடிப்பும் அருமை.   எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி ஆகியோர் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. முதல் பாகத்தில் ஏ.ஆர். ரஹ்மான் போட்டிருந்த பின்னணி இசையை கூட இரண்டாம் பாகத்தில் அனிருத் அருமையாக பயன்படுத்தியுள்ளார்.  அது செம மாஸாக இருந்தது. அதே போல் ரவிவர்மன் ஒளிப்பதிவு மாபெரும் பிரமாண்டம். முத்துராஜின் கலை இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலம். VFX காட்சிகளை மிரட்டலாக காட்டியுள்ளார் ஷங்கர். கமல் ஹாசன் – பாபி சிம்ஹா சேசிங் காட்சி, கிளைமாக்ஸ் சண்டை காட்சி சிறப்பாக  இருந்தது., Prosthetic makeup பக்காவாக செய்துள்ளனர்.
 அன்பறிவு, ரமசான், அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, தியாகராஜன் ஆகியோரின்  சண்டைக்காட்சி  கவனிக்க வைக்கிறது.
இந்தியன் முதல் பாகத்தில் தமிழ்நாட்டில் நடந்த லஞ்சம் ஊழலை சுட்டிக்காட்டி படம் எடுத்திருந்த ஷங்கர், இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க சேனாபதி சென்றால் என்ன நடக்கும் என்பதை பிரமாண்டமாக காட்டியுள்ளதோடு எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
#indian2
Comments (0)
Add Comment